உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்திகள்

அரிவாள் வெட்டு சிவகாசி: நாரணாபுரம் சிவன் நகரை சேர்ந்தவர் கருத்தபாண்டி. வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த குடும்பத்திற்கு பணம் தராமல் உறவினர்களுக்கு செலவு செய்து வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்து இவரது மகன் சுதாகர் 22, மாமா சூர்யா பிரகாஷ், உள்ளிட்ட சிலர் கருத்தப்பாண்டி உறவினர்கள் சந்தோஷ் குமார் 25, சந்தியா 29, ஆகியோரை அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். கருத்த பாண்டி சந்தோஷ் குமார், செல்லம்மாள், சந்தியா, கருப்பையா ஆகியோர் சுதாகர், சூர்ய பிரகாஷை அரிவாளால் தாக்கினர். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர். இளைஞர் மா்ம சாவு அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டியை சேர்ந்த கட்டட தொழிலாளி கணேஷ்குமார் 24. இவர் சில மாதங்களாக மது போதைக்கு அடிமையாகி உள்ளார். நேற்று அதிகாலையில் இவர் அருப்புக்கோட்டை புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள டாஸ்மாக் முன்பு உள்ள நுழைவு வாயிலில் கயிற்றில் துாக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார். அருப்புக்கோட்டை டவுன் போலீசார் கணேஷ்குமார் தற்கொலை செய்து கொண்டாரா, வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று விசாரிக்கின்றனர். மது விற்றவர்கள் கைது சிவகாசி: அதிவீரன் பற்றி மேற்குத் தெருவை சேர்ந்த அசோக்குமார் 37, காசிநாத 59 ஆகியோர் அரசு அனுமதியின்றி மதுபானங்கள் விற்பனை செய்தனர். திருத்தங்கல் போலீசார் இருவரையும் கைது செய்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். முதியவர் பலி சிவகாசி: திருத்தங்கல் ஸ்டாண்டர்ட் காலனியை சேர்ந்தவர் மாடசாமி 79. இவர் தனது உறவினர் ராஜாவை ஏற்றிக் கொண்டு டூவீலரில் சாத்துார் ரோட்டில் சென்றபோது சன்னாசிப்பட்டி ராஜபாண்டி 20, ஓட்டி வந்த டூவீலர் மோதியதில் மாடசாமி இறந்தார். ராஜா காயமடைந்தார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை