உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்தி

வாலிபர் பலி சாத்துார்: சாத்துார் என்.வெங்கடேஷ்வர புரத்தை சேர்ந்தவர் முருகேசன் மகன் அபிஷேக், 18 அக்.10ல் கோவில்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று விட்டு இரவு 7:50 மணிக்கு ஊர் திரும்பினார். என்.வெங்கடேஷ்வரபுரம் விலக்கில் வரும் போது சறுக்கி கீழே விழுந்து காயமடைந்தார். திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் நேற்று அதிகாலை 5 :00 மணிக்கு பலியானார். சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர். சிறுமி மாயம் சாத்துார், அக்.17- சாத்துார் படந்தால் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி, 55. இவரது மகள் 17 வயது சிறுமி நேற்று முன்தினம் வீட்டில் இருந்தவர் மாயமானார். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ