மேலும் செய்திகள்
போலீஸ் செய்தி
19-Dec-2025
சிறுமி மாயம் சாத்துார்: குருலிங்கபுரம் கருப்பசாமி,55. இவரது மகள் 17 வயது சிறுமி விருதுநகரில் இன்ஜினியரிங் படித்து வந்தார். டிச.21 கல்லுாரி சென்று விட்டு வீட்டிற்கு வந்தவர். இரவு 7:00 மணிக்கு மாயமானார். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர். மினி பஸ்சில் இறந்து கிடந்த வாலிபர் மதுரை நரிமேடு மேல பொன்னகரத்தைச் சேர்ந்தவர் சுப்புராஜ் 35. சிவகாசி பாரைப்பட்டியில் உள்ள ஒர் க் ஷாப்பில் தங்கி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அவர் ஒர் க் ஷாப் அருகே வேலைக்கு வந்திருந்த மினி பஸ்சிற்குள் இறந்து கிடந்தார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர். சிறுமிக்கு பாலியல் தொல்லை 3 பேர் மீது போக்சோ சாத்துார்: அமீர் பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜா, 22. 16 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார்.பெற்றோருக்கு கண்டித்ததால் சிறுமி அவருடன் பேசுவதை தவிர்த்தார்.இதனால் ஆத்திரம் அடைந்த ராஜா இவரது நண்பர்கள் கண்ணன் 22, மாரிக்கண்ணன்24.ஆகியோருடன் அந்த சிறுமியின் வீட்டிற்குச் சென்று தன்னுடன் பேசுமாறு மிரட்டினர். 3 பேர் மீதும் போக்சோ வழக்கு பதிந்து மகளிர் போலீசார் விசாரிக்கின்றனர். உண்டியல் திருட்டு அருப்புக்கோட்டை: பாலையம்பட்டி கரிசல் கண்மாய் இருளப்பசுவாமி கோயிலில் நேற்று முன்தினம் இரவில் கேட்டை உடைத்து 2 உண்டியல்களை திருடி சென்றனர். பூஜாரி மங்கையன் புகாரில் அருப்புக்கோட்டை டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
19-Dec-2025