உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அனுப்பன்குளத்தில் பள்ளி செல்லும் வழியில் தடுப்புச்சுவரின்றி குளம்

அனுப்பன்குளத்தில் பள்ளி செல்லும் வழியில் தடுப்புச்சுவரின்றி குளம்

சிவகாசி: சிவகாசி அருகே சுந்தரராஜபுரத்திலிருந்து அனுப்பன்குளம் செல்லும் வழியில் ரோட்டோரத்தில் திறந்த நிலை குளத்தினால் பெற்றோர் அச்சத்தில் உள்ளனர்.இந்த குளத்தில் மிகச் சிறிய அளவு தடுப்புச் சுவர் இருப்பதோடு அது தெரியாத அளவிற்கு புதர்கள் மறைத்துள்ளது. இதன் வழியாக நண்பன் குளத்திலுள்ள அரசு நடுநிலைப் பள்ளிக்கு மாணவர்கள் சென்று வருகின்றனர். மேலும் பட்டாசு கடைகள் உள்ளதால் பெரிய வாகனங்களும் வந்து செல்கின்றன. ரோடு குறுகியதாக உள்ள நிலையில் ரோடு ஓரத்தில் உள்ள குளத்தின் ஓரமும் வாகன ஓட்டிகளுக்கு தெரியவில்லை. இதனால் சிறிது கவனம் சிதறினாலும் குளத்திற்குள் விழ வாய்ப்பு உள்ளது. எனவே அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பு இங்கு தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும்என பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை