உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பொங்கல் கரும்பு கட்டுகள் விற்பனை

பொங்கல் கரும்பு கட்டுகள் விற்பனை

விருதுநகர், : விருதுநகரில் பொங்கல் பண்டிகை விற்பனைக்காக கரும்பு கட்டுகள் லாரிகளில் கொண்டுவரப்பட்டு குவித்து வைக்கப்பட்டு, விற்பனை படுஜோராக நடக்கிறது.பொங்கல் பண்டிகை நாளை (ஜன. 14) கொண்டாடப்படுவதை முன்னிட்டு கடைசி நேர விற்பனை மும்மரமாக நடந்து வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் நகர், புறநகர், ஊரகப்பகுதிகளில் கரும்பு கட்டுகள் விற்பனை செய்வதற்காக லாரிகளில் கொண்டுவரப்பட்டு அந்தந்த பகுதிகளில் குவித்து வைக்கப்பட்டுள்ளது.விருதுநகரில் இருந்து காரியாப்பட்டி செல்லும் ரோட்டில் உள்ள பாண்டியன் நகர் மெயின் ரோட்டில் பொங்கலுக்கு விற்பனை செய்வதற்காக பிற மாவட்டங்களில் இருந்து லாரிகள் மூலம் கரும்பு கட்டுகள் கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியை சுற்றியுள்ள மக்கள் பொங்கல் சீர் கொடுப்பதற்காகவும், தங்கள் வீடுகளுக்கும் கரும்பு கட்டுகளை வாங்கி செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை