உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  வத்திராயிருப்பு நீதிமன்றத்திற்கு இடம் முதன்மை மாவட்ட நீதிபதி ஆய்வு

 வத்திராயிருப்பு நீதிமன்றத்திற்கு இடம் முதன்மை மாவட்ட நீதிபதி ஆய்வு

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு நீதி மன்றத்திற்கு சொந்த கட்டடம் கட்டுவதற்கான இடம் தேர்வு செய்வது குறித்து முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமார் நேரடி ஆய்வு செய்தார். வத்திராயிருப்பு தாலுகாவில் கிருஷ்ணன் கோவில், நத்தம் பட்டி, கூமாபட்டி, வத்திராயிருப்பு ஆகிய நான்கு போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளது. இங்கு பதிவாகும் வழக்கு களை விசாரிப்பதற்காக வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய பழைய அலு வலகத்தில் தற்போது நீதிமன்றம் இயங்கி வருகிறது. இந்நிலையில் சொந்த கட்டடம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்வதற்காக முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமார் நேற்று முன் தினம் மகாராஜபுரம் ரோட்டில் உள்ள ஓரிடத்தையும், தற்போது நீதிமன்றம் உள்ள இடத்தில் அருகில் உள்ள மற்றொரு இடத்தையும் பார்வையிட்டார். உடன் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் பங் கேற்றனர். எந்த இடம் தேர்வு செய்வது குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி