உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  செவித்திறனை பாதிக்கும் தனியார் பஸ் ஏர் ஹாரன்கள் வியாபாரிகள் அவதி

 செவித்திறனை பாதிக்கும் தனியார் பஸ் ஏர் ஹாரன்கள் வியாபாரிகள் அவதி

சாத்துார்: சாத்துாரில் செவித்திறனை பாதிக்கும் அளவிற்கு தனியார் பஸ் ஏர்ஹாரன்களால் வியாபாரிகள் அவதிப்படுகின்றனர். சாத்துார் மெயின்ரோட்டில் நகைக்கடை பஜார் தெரு உள்ளது. இந்தப் பகுதியில் சாலை மிகவும் குறுகலானது. காலை, மாலை நேரங்களில் பள்ளிகளுக்கு மாணவ மாணவியர்களை இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லும் பெற்றோர்களும் வெளியூருக்கு வேலைக்கு செல்லும் பணியாளர்களும் அதிக அளவில் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இவ்வழியாக செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் சாலையில் நின்றே பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர். இதன் காரணமாகவும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது இது போன்ற தருணங்களில் தனியார் பஸ்கள், பாதையை விடச் சொல்லி ஏர்ஹாரன்களை ஒலிக்கின்றனர். இதனால் இந்த பகுதியில் கடன் நடத்தி வரும் வியாபாரிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். கடைகளில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளும் வாடிக்கையாளர்களும் காதுகளை மூடி திரும்பிப் பார்த்து எரிச்சல் அடைகின்றனர். இதனால் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகி தவித்து வருகின்றனர். அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர் ஹாரன்களை பயன்படுத்த தடை உள்ளது. ஆனால் தனியார் டவுன் பஸ்களும் மினி பஸ்களும் ஏர்ஹாரன்கள் பொருத்தி மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். தனியார் பஸ்களில் பொருத்தப்பட்டுள்ள ஏர் ஹாரன்களை போலீசார் அகற்ற வேண்டுமென மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை