மேலும் செய்திகள்
வளர்ச்சித் திட்டப்பணிகள் அமைச்சர் பங்கேற்பு
17-Aug-2025
அருப்புக்கோட்டை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் அருப்புக்கோட்டை கோவிலாங்குளம் சந்திப்பில் 8.50 லட்சம் நிதியில் அமைக்கப்பட்ட ஹைமாஸ் லைட்டை திறந்து வைத்தார். பின்னர் கோவிலாங் குளம் கிராமத்தில் உங்களுடன் முதல்வர் திட்ட முகாமை துவக்கி வைத்தார். மாவட்ட கனிமவள அறக்கட்டளை திட்டத்தில் தலா 20 லட்சம் நிதியில் புதிய அங்கன்வாடி மையங்களை கட்டுவதற்கு ஆமணக்கு நத்தம், சிதம்பரபுரம், சின்ன செட்டி குறிச்சி, செட்டிபட்டி உள்ளிட்ட கிராமங்களில் அடிக்கல் நாட்டினார். உடன் முன்னாள் ஊராட்சி தலைவர் பிரபாகரன், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
17-Aug-2025