உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பாதிரியாரை கண்டித்து காத்திருப்பு போராட்டம்

பாதிரியாரை கண்டித்து காத்திருப்பு போராட்டம்

ராஜபாளையம்: ராஜபாளையம் சி.எஸ்.ஐ. சர்ச்சில் நிர்வாக கமிட்டி தேர்தல் முறையாக நடைபெறவில்லை என பாதிரியாரை கண்டித்து சர்ச் உறுப்பினர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.ராஜபாளையம் காமராஜர் நகரில் சி.எஸ்.ஐ துாய பவுல் சர்ச் உள்ளது. இதில் 600 குடும்பங்களை சேர்ந்த 1000க்கும் அதிகமானோர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த சர்ச்சின் தலைவர், போதகராக ஜான் கமலேசன் செயல்படுகிறார். 2023 மார்ச் மாதத்துடன் நிர்வாக கமிட்டியின் பதவிக்காலம் முடிந்ததை அடுத்து நிர்வாகிகள் தேர்தலுக்கு நீதிமன்றம் தடை விதித்ததால் ஜான் கமலேசன் நிர்வாகத்தை கவனித்து வந்தார்.இந்நிலையில் நிர்வாக கமிட்டி தேர்தல் முறையாக நடைபெறவில்லை என்றும் மறுதேர்தல் நடைபெற வேண்டும் எனக்கூறி சர்ச் முன் உறுப்பினர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி