உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அம்மன் கோவில்பட்டி வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்

அம்மன் கோவில்பட்டி வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்

சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வெள்ளூர் ஊராட்சி அம்மன் கோவில்பட்டியில் அடிப்படை வசதிகள் இல்லாததை கண்டித்து மக்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர். அம்மன் கோவில்பட்டி ஆதிராவிடர் பகுதியில் , ரோடு, தெருவிளக்குகள், வாறுகால், சுகாதார வளாகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் ஏற்படுத்தப்படவில்லை. வாறுகால் வசதி இல்லாததால் மூன்று தெருக்களில் கழிவு நீர் தேங்கிக் கிடக்கிறது. இதனால் குழந்தைகளுக்கு தொடர்ச்சியாக காய்ச்சல் பரவி வருகிறது. தெருவிளக்கு இல்லாமல் மக்கள் இரவில் நடமாடுவதற்கு சிரமப்படுகின்றனர். இது குறித்து மக்கள் பலமுறை ஊராட்சி நிர்வாகத்தில் மனு கொடுத்தும், கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியும் எந்த பணியும் நடைபெறவில்லை. எனவே மக்கள் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி தங்கள் வீடுகளில் கருப்பு கொடியை ஏற்றி போராட்டம் நடத்தினர். மீனாட்சி, வட்டார வளர்ச்சி அலுவலர், வெள்ளூர் ஊராட்சிக்கு நிதி ஒதுக்கப்பட்டு வளர்ச்சி பணிகள் நடைபெற உள்ளது. குடிநீர் பிரச்னையை தீர்ப்பதற்கு பணிகள் நடந்து வருகிறது. சுகாதார பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ