விருதுநகரில் வாழ்வூதியம் கோரி மறியல்; கைது 224
விருதுநகர்: விருதுநகரில் வாழ்வூதியம் கோரி மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர் சங்கத்தை சேர்ந்த 224 பேரை போலீசார் கைது செய்தனர்.அங்கன்வாடி ஊழியர், ஊராட்சி செயலாளர்களுக்கு காலமுறை ஊதியம், சட்டப்பூர்வ ஓய்வூதியம், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட ஊழியர், கொசு ஒழிப்பு பணியாளர், என்.எச்.எம்., ஊழியர்கள் என பணி நிரந்தரம் பணி பாதுகாப்பு கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்டனர்.சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் எஸ்தர் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வைரவன், மாவட்ட தலைவர் அந்தோணிராஜ், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் லியாகத் அலி, சத்துணவு ஊழியர் சங்க பொதுச்செயலாளர் நுார்ஜகான் பேசினர். 224 பேரை கைது செய்தனர்.