உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மயான வசதி கோரி  விருதுநகரில் மறியல்

மயான வசதி கோரி  விருதுநகரில் மறியல்

விருதுநகர்: விருதுநகரில் மயானத்தில் வசதிகள் வேண்டி ரோடு மறியல் நடந்தது. விருதுநகர் கம்மாபட்டி, அம்பேத்கர் நகர், கே.கே.எஸ்.எஸ்.என்., நகர், அண்ணா நகர், புதுத்தெரு பகுதி ஹிந்து பறையர் மக்கள் கூரைக்குண்டு கோட்டைப்பட்டி மயானத்தில் தகனம், புதைத்து வருகின்றனர். நேற்று இறந்த ஒருவரின் உடலை எரித்தனர். கூரை இல்லாததால் பிணத்தின் மேலே தகரம் வைத்து எரிக்க நேரிட்டது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் மயானத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள், அளவைக்கல் நடக் கோரி ரோடு மறியலில் ஈடுபட்டனர். வருவாய் ஆய்வாளர் ரியாஸ் முகமது சமரசம் செய்தார். 7 நாட்களில் அளவைக்கல் நடுவதாக கூறினார். மக்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை