டிரைவர், கண்டக்டர்களுக்கு மோர் வழங்கல்
விருதுநகர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழகத்தின் பஸ் டிரைவர், கண்டக்டர், பணியாளர்களுக்கு மோர் வழங்குவது துவக்கப்பட்டுள்ளது.மாவட்டத்தில்அக்னி நட்சத்திரம் துவங்கும் முன்பே வெயில் வாட்டி வதைத்து வருவதால் அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் வழித்தடங்களில் பணிபுரியும் போதும், பணிமனைகளில் பணிபுரிபவர்களுக்கும் உடலில் இருந்து அதிகப்படியான நீர்ச்சத்து வெளியேறுகிறது. இதனால் பணிமனைகளில் உள்ள பணியாளர்கள், பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்கு மோர் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.இதையடுத்து பணிமனைகள், உணவகம், ஓய்வறைகள், நேர கண்காணிப்பாளர் அறைகள், பஸ் ஸ்டாண்ட்களிலும் அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் பணியாளர்களுக்கு குடிநீர், மோர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பஸ்களில் முதலுதவி பெட்டிகள் இருப்பதை கண்காணித்தும், ரேடியேட்டர் உள்ளிட்டவற்றின் வெப்பத்தை பரிசோதித்து, அதில் குறைகள் இருந்தால் உடனே சரி செய்ய வேண்டும் என பணிமனைகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.