திருத்தங்கலில் நாய்களுக்கான ரேபிஸ் வெறிநோய் தடுப்பூசி முகாம்
சிவகாசி : தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக திருத்தங்கலில் நாய்களுக்கான ரேபிஸ் வெறி நோய் தடுப்பூசி முகாம் நடந்தது.திருத்தங்கல் பாண்டியன் நகர், சத்யா நகர், மாரியம்மன் கோயில் மெயின் பஜார், பள்ளிப் பகுதிகளில் நாய்களால் மக்கள், பள்ளி மாணவர்கள் அவதிப்பட்டனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக மாநகராட்சி, ரோட்டரி கிளப் ஆப் திருத்தங்கல், கால்நடை பராமரிப்பு துறை சார்பில் ரேபிஸ் வெறிநோய் தடுப்பூசி முகாம் திருத்தங்கலில் நடந்தது. மேயர் சங்கீதா, கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, துணை மேயர் விக்னேஷ் பிரியா தலைமை வகித்தனர். அரசு கால்நடை டாக்டர்கள் பழனிச்சாமி, துறை மாஸ்கோ மலர் தலைமையிலான மருத்துவ குழுவினர் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தினர்.