உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கலப்பு திருமணத்தால் ஆத்திரம்: மகளின் கணவருக்கு கத்திக்குத்து

கலப்பு திருமணத்தால் ஆத்திரம்: மகளின் கணவருக்கு கத்திக்குத்து

நரிக்குடி, :விருதுநகர் மாவட்டம் நரிக்குடியில் மகளை கலப்பு திருமணம் செய்த செந்தமிழ் செல்வனை 28, தாக்கி கத்தியால் குத்திய வழக்கில் தந்தை சரவண முருகனை போலீசார் கைது செய்தனர். அண்ணன் பழனியை தேடி வருகின்றனர்.நரிக்குடி உவர்குளத்தைச் சேர்ந்த செந்தமிழ்ச்செல்வன். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் அதே ஊரைச் சேர்ந்த வேறு சமூகத்தை சேர்ந்த சத்தீஷ்வரியை காதலித்து பெண்ணின் பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்தார்.ஆறு மாதங்களுக்கு முன் அருப்புக்கோட்டை இ.பி., காலனியில் புதுமணத்தம்பதி குடியேறினர். இந்நிலையில் உவர்குளத்தில் நடந்த கோயில் திருவிழாவிற்கு செந்தமிழ்ச்செல்வனின் உறவினரான மேஸ்திரி விருந்துக்கு அழைத்தார்.இதனை அறிந்த சத்தீஷ்வரியின் தந்தை சரவணமுருகன், அண்ணன் பழனி ஆகியோர் செந்தமிழ்ச்செல்வன் உறவினருடன் டூவீலரில் வரும் போது அவரை வழி மறித்து தாக்கினர். பழனி கத்தியால் செந்தமிழ்ச்செல்வனை குத்தினார். காயமடைந்த அவர் திருச்சுழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் சரவண முருகனை நரிக்குடி போலீசார் கைது செய்தனர். பழனியை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை