மேலும் செய்திகள்
நான்கு வழிச்சாலை ரயில் பாதையில் மேம்பாலங்கள்
13-Sep-2025
ராஜபாளையம் : ராஜபாளையம் வழியே செல்லும் நான்கு வழிச்சாலையின் ரயில்வே மேம்பால பணிகளின் ஸ்டீல் ஆர்க் பணிகள் கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. திருமங்கலம்- கொல்லம் நான்கு வழிச்சாலை பணிகள் முதல் கட்டமாக ராஜபாளையம் வரை முடிந்துள்ளது. இதில் ஸ்ரீவில்லிபுத்துார் சித்தாலம்புத்துார், ராஜபாளையம் முதுகுடி ரயில்வே லைனை கடக்கும் மேம்பால பணிகள் தாமதமாக தொடங்கியதால் போக்குவரத்தில் இடையூறு ஏற்பட்டது. இதனால் மதுரையில் இருந்து தொடரும் நான்கு வழிச்சாலை பணிகள் கிருஷ்ணன் கோயில் வழியாக தொடர முடியாத நிலை இருந்தது. ஸ்ரீவில்லிபுத்துார் ரயில்வே மேம்பால பணிகள் முடிவு பெறும் நிலையில் ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்ட் அடுத்த முதுகுடி ரயில்வே மேம்பாலத்திற்கான கான்கிரீட் பணிகள் முடிந்துள்ளது. தற்போது ரயில்வே லைன் இணைப்பிற்கு ஸ்டீல் ஆர்க் வெல்டு பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இதே வேகத்தில் தொடர்ந்தால் ஓரிரு மாதங்களில் பணிகள் முடிவடையும். இந்நிலையில் கிருஷ்ணன் கோவிலில் இருந்து ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்ட் அடுத்து முதுகுடி வரையிலான நான்கு வழிச்சாலையில் தடையின்றி பயணிக்க முடியும். இதன் மூலம் இரண்டு நகர்ப்பகுதிகளிலும் ஏற்படும் நெரிசல் பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
13-Sep-2025