உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஆமத்துார் அரசு பள்ளி முன் தேங்கும் மழைநீர்

ஆமத்துார் அரசு பள்ளி முன் தேங்கும் மழைநீர்

விருதுநகர் : விருதுநகர் அருகே ஆமத்துார் அரசு பள்ளி முன் தேங்கும் மழைநீரால் மாணவர்கள் கடும் சிரமத்தை சந்திக்கும் சூழல் உள்ளது.ஆமத்துார் அரசு துவக்கப்பள்ளியில் 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இந்த வளாகத்திற்கு சுற்றுச்சுவர் கிடையாது. இது பாதையாக வேறு உள்ளதால் அதிக வாகனங்கள் இவ்வழியாக சென்று வருகின்றன. பள்ளி வளாகமாக கருதப்படும் இந்த இடம் மண்தரையாக உள்ளதால் மழைநீர் தேங்கி பாதிப்பை ஏற்படுத்துகிறது. மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மழை நீர் தேங்கி வடிய பல நாட்கள் ஆவதால் வாகன ஓட்டிகளும் சறுக்கி விபத்தை சந்திக்கின்றனர். தற்போது உள்ளாட்சிகள் பதவிக்காலம் வேறு முடிந்து விட்டதால் பேவர் பிளாக் ரோடு போட கூட வசதியில்லை. எனவே தற்காலிகமாக ஏதாவது வசதி செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை