உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  அரசு மருத்துவமனையின் நீரூற்றில் மழை நீர் தேக்கம் கொசு உற்பத்திக்கு வாய்ப்பு

 அரசு மருத்துவமனையின் நீரூற்றில் மழை நீர் தேக்கம் கொசு உற்பத்திக்கு வாய்ப்பு

விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவமனையில் பல மாதங்களாக செயல்படாமல் உள்ள நீரூற்றில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் தண்ணீர் தேங்கியுள்ளது. இதில் கொசுக்கள் உற்பத்தியாகும் நிலை உருவாகியுள்ளது. விருதுநகர் அரசு மருத்துவமனை 2022 ஜன.12ல் திறக்கப்பட்ட போது வெளிநோயாளிகள் சீட்டு பதிவு செய்யும் இடத்திற்கு பார்ப்பவர்களை கவர்வ தற்காகவும், மரத்தடியில் மனஅமைதியை ஏற்படுத்துவதற்காகவும் நீரூற்று அமைக்கப்பட்டது. ஆனால் மருத்துவமனையில் தண்ணீர் பற்றாக்குறை இருந்ததால் நீரூற்று செயல்படுத்த முடியாத நிலை இருந்தது. தற்போது தண்ணீர் பற்றாக்குறை சரிசெய்யப்பட்டும் இதுவரை நீரூற்று மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை. கடந்த சில நாட்களாக பெய்த மழையால் நீரூற்றில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்த தேங்கிய நன்னீரில் ஏ.டி.எஸ்., கொசுக்கள் முட்டையிட்டு டெங்கு பரப்பும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே நீரூற்று மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவரவும், தண்ணீர் தேங்குவதை சீரமைக்கவும் மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை