உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சிவகாசி பஸ் ஸ்டாண்டில் கழிவு நீராக மாறிய மழை நீர்

சிவகாசி பஸ் ஸ்டாண்டில் கழிவு நீராக மாறிய மழை நீர்

சிவகாசி: சிவகாசி பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் பஸ் ஏறும் இடத்தில் மழைக் காலங்களில் தண்ணீர் தேங்குவதால் பயணிகள் அவதிப்படுகின்றனர். சிவகாசி பஸ் ஸ்டாண்டிற்கு தினமும் 200 க்கும் மேற்பட்ட முறை அரசு, தனியார் பஸ்கள் வந்து செல்கின்றன. அருகில் உள்ள கிராமங்கள் தவிர சாத்துார், விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம் உள்ளிட்ட நகரங்களில் இருந்து பல்வேறு பணி நிமித்தமாக தினமும் ஏராளமானோர் பஸ் ஸ்டாண்டிற்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் பஸ் ஸ்டாண்டின் மேற்குப் பகுதி தாழ்வாக அமைந்துள்ள நிலையில் சிறிய மழை பெய்தாலும் தண்ணீர் தேங்கி விடுகின்றது. தண்ணீர் வெளியேறவே வழியில்லாமல் நாளடைவில் கழிவுநீராகி டெங்கு கொசு உற்பத்தி கேந்திரமாக மாறிவிடுகிறது. பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் கொசுக்கடியால் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் துர்நாற்றத்தினாலும் சிரமப்படுகின்றனர். பஸ்சிலிருந்து ஏறி இறங்கும் பயணிகளும் தடுமாறுகின்றனர். பஸ்கள் செல்லும்போது மழைநீர் அடிக்கப்பட்டு பயணிகள் மீது விழுகின்றது. எனவே பஸ் ஸ்டாண்டில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை