உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / 200 தொகுதிகளில் வெற்றி பெறும் ராஜேந்திர பாலாஜி உறுதி

200 தொகுதிகளில் வெற்றி பெறும் ராஜேந்திர பாலாஜி உறுதி

சிவகாசி: வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார்.சிவகாசி, திருத்தங்கலில் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் உறுப்பினர் உரிமைச் சீட்டு வழங்குதல், கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து செயல் வீரர்கள் ஆலோசனைகூட்டம் நடந்தது. இதில் தலைமை வகித்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாவது: மக்கள் பிரச்னைகளை தீர்க்க சம்பந்தப்பட்ட துறைகளின் அரசு அதிகாரிகளை அணுகி நடவடிக்கை எடுத்தால் தான் மக்கள் நம்மை ஏற்றுக் கொண்டு ஓட்டளிப்பர்.அதிக பூத் கமிட்டிகளை ஏற்படுத்தினால் சிவகாசியில் மட்டுமல்ல தமிழகம் முழுவதிலும் அ.தி.மு.க., வெற்றி பெறும். தி.மு.க., நமக்கு எதிரி கிடையாது. உதிரி. மன்னராட்சி போல் நடக்கும் தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். எதிர்வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி இலக்கை நோக்கியே நம் பயணம் இருக்க வேண்டும். 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும். நாங்கள் உங்களுக்கு துணையாக இருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !