ரேஷன் அரிசி பறிமுதல்
சிவகாசி : சிவகாசி விஜயலட்சுமி காலனியில் சிலர் வீடு வீடாகச் சென்று ரேஷன் அரிசியை வாங்கி கடத்த பதுக்கி வைத்திருந்தனர். இது குறித்து தகவல் அறிந்த சிவகாசி வட்ட வழங்கல் அலுவலர் கோதண்டராமன், குடிமை பொருள் வழங்கல் தனி வருவாய் ஆய்வாளர் ஜாய் ஜெனாரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்ற போது ரேஷன் அரிசி வாங்கியவர்கள் தப்பினர். ஒன்றரை டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த அதிகாரிகள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கியில் ஒப்படைத்தனர்.