வத்திராயிருப்பில் கோயில் நிலங்கள் மீட்பு
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு தாலுகா அணைக்கரைப்பட்டி அழகிய மணவாள பெருமாள் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்து அறநிலையத்துறை, வனத்துறையினர் மீட்டு எல்லை கற்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.ஒரு ஏக்கர் 85 சென்ட் பரப்பளவில் அமைந்துள்ள இந்த கோயிலை சுற்றி உள்ள சில நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்தது. இதனை கோயில் அதிகாரிகள், வத்திராயிருப்பு வருவாய் துறையை அதிகாரிகள் குழுவினர் நேற்று காலை 11:00 மணிக்கு நேரடியாக அளவீடு செய்து, எல்லை கற்களை நட்டனர். கோயில் நிலங்களை சுற்றி உடனடியாக கம்பி வேலி அமைக்கப்பட உள்ளதாக செயல் அலுவலர் ஜோதிலட்சுமி தெரிவித்தார்.