உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / குருவாயூர் எக்ஸ்பிரசில் முன்பதிவில்லாத பெட்டிகள் குறைப்பு--: பயணிகள் அதிர்ச்சி

குருவாயூர் எக்ஸ்பிரசில் முன்பதிவில்லாத பெட்டிகள் குறைப்பு--: பயணிகள் அதிர்ச்சி

ராஜபாளையம் : மதுரை - குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் எண்ணிக்கையை குறைத்து ஸ்லீப்பர் பெட்டிகளை அதிகரித்துள்ளது பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மதுரை- - செங்கோட்டை எக்ஸ்பிரஸ், செங்கோட்டை- - கொல்லம் எக்ஸ்பிரஸ், புனலுார் -- குருவாயூர் இன்டர்சிட்டி ஆகிய மூன்று ரயில்களை இணைத்து 2023 ஆகஸ்ட் முதல் மதுரை- - குருவாயூர் எக்ஸ்பிரஸ் (16327/16328) ரயிலாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் 9 முன்பதிவு இல்லாத பெட்டிகள், மூன்றாம் வகுப்பு ஸ்லீப்பர் பெட்டிகள் 2, குளிர்சாதன பெட்டி 1 என 14 பெட்டிகள் உள்ளன. தற்போது சி.பி.சி தொழில்நுட்பத்தில் மறு சீரமைக்கப்பட்ட பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ளது. சி.பி.சி தொழில்நுட்பத்தில் பெட்டிகளை தானியங்கி இணைக்கும் வசதி, விபத்துகளின் போது பெட்டிகள் ஒன்றுக்கொன்று ஏறுவதை தடுத்தல், தடம் புரள்வது மற்றும் விபத்தை தடுக்கும் அம்சத்துடன் 24 பெட்டிகள் இழுக்கும் திறனுடன் உள்ளது.ஏற்கனவே முன்பதிவு பெட்டிகளில் இடமில்லாமல் காத்திருப்போர் பட்டியல் அதிகரித்து வருவதால் முன்பதிவு பெட்டிகளை அதிகரிக்க பயணிகள் சார்பில் தொடர் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. ஆனால் ஏப். 15- முதல் முன்பதிவில்லாத பெட்டிகள் எண்ணிக்கையை 9-ல் இருந்து 5 ஆக குறைத்து, ஸ்லீப்பர் பெட்டிகள் 2-ல் இருந்து 6-ஆக அதிகரித்து ரயில்வே அறிவித்துள்ளது.

குறைப்பு

2023 வரை மதுரை- -செங்கோட்டை பாசஞ்சர் 14 முன்பதிவு இல்லாத பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வந்தது. 3 ரயில்களை இணைத்து பெட்டிகளின் எண்ணிக்கையை குறைத்த நிலையில் தற்போது முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கையும் குறைக்கப்படுவது பயணிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கோட்டை- புனலுார் மலை ரயில் பாதையில் 21 எல்.எச்.பி அல்லது 24 ஐ.சி.எப் பெட்டிகளுடன் ரயில் இயக்க ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பு அமைப்பு அனுமதி வழங்கியுள்ள நிலையில் கூடுதல் பெட்டிகளை இணைக்காமல் ஸ்லீப்பர் பெட்டிகளின் எண்ணிக்கையை குறைத்துள்ளது மதுரை, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லுார், தென்காசி, செங்கோட்டை பயணிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை