உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சொந்த கட்டடமின்றி தவிக்கும் வட்டார கல்வி அலுவலகம்

சொந்த கட்டடமின்றி தவிக்கும் வட்டார கல்வி அலுவலகம்

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் வட்டார கல்வி அலுவலகத்திற்கு சொந்த இடம் இல்லாமல் அதன் அலுவலர்கள், ஆசிரியர்கள் தவித்து வருகின்றனர்.சிவகாசி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட ஸ்ரீவில்லிபுத்துார் வட்டார கல்வி அலுவலகம், சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வந்தது.பின் திருமுக்குளம் நகராட்சி பயணியர் விடுதி கட்டடத்தின் ஒரு பகுதியில் சில ஆண்டுகள் செயல்பட்டது. தற்போது கிருஷ்ணன்கோவிலில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.கடந்த ஆண்டு தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனரின் உத்தரவின் படி பள்ளி வளாகங்களில் கல்வி அலுவலகங்கள் செயல்படக்கூடாது. அதனை வாடகை கட்டடத்திற்கு இடம் மாற்றம் செய்ய வேண்டும் என கூறப்பட்டது. இதனால் கிருஷ்ணன் கோவில் துவக்கப்பள்ளி வட்டார கல்வி அலுவலகத்திற்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் இடம் தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.தற்போது தாசில்தார் அலுவலகமும், ஊராட்சி ஒன்றிய அலுவலகமும் புதிதாக கட்டப்பட்டுள்ளதால் காலியாக உள்ள பழைய கட்டடத்தை தங்களுக்கு ஒதுக்கி தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள், அலுவலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ