ம.நீ.ம., கோரிக்கை
விருதுநகர்: விருதுநகர் ம.நீ.ம., மத்திய மாவட்டச் செயலாளர் காளிதாஸ், கலெக்டர் சுகபுத்ராவிடம் அளித்த மனு:விருதுநகர் ஒன்றியத்தில் 58 ஊராட்சிகளில் உள்ள சுகாதார ஊக்குனர்களுக்கு இதுவரை தொகுப்பூதியம் வழங்கப்படவில்லை. இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சுகாதார ஊக்குனர்களுக்கு தொகுப்பூதியம் உடனடியாக வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.