உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நர்சிங் படிக்காத மகப்பேறு உதவியாளர்களை பதவி உயர்வில் செவிலியராக்க எதிர்ப்பு

நர்சிங் படிக்காத மகப்பேறு உதவியாளர்களை பதவி உயர்வில் செவிலியராக்க எதிர்ப்பு

விருதுநகர்:''சென்னை மாநகராட்சி மருத்துவமனைகளில் காலியான செவிலியர் பணியிடங்களில் 18 முதல் 24 மாதங்கள் பயிற்சி முடித்த துணை செவிலியர், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர், மகப்பேறு உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கி செவிலியராக்க கூடாது,'' என, விருதுநகரில் எம்.ஆர்.பி., செவிலியர்கள் மேம்பாட்டு சங்க பொதுச் செயலாளர் சுபின் தெரிவித்தார்.அவர் மேலும் கூறியதாவது: சென்னை மாநகராட்சி மருத்துவமனைகளில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களில் நகர்ப்புற சுகாதார செவிலியர்களுக்கு பதவி உயர்வு வழங்கி நிரப்ப தகுதியானவர் விவரம் கேட்கப்பட்டுள்ளது. இதில் துணை செவிலியர், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர், மகப்பேறு உதவியாளர்களில் 18 முதல் 24 மாதங்கள் பயிற்சிகள் முடித்த ஊழியர்களுக்கு செவிலியராக பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.ஆனால் இந்திய நர்சிங் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிப்ளமோ, பி.எஸ்.சி., நர்சிங், அதற்கு மேல் படித்து முடித்து, மாநில நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்தால் மட்டுமே மருத்துவமனைகளில் செவிலியராக பணி செய்ய முடியும்.இந்த விதியை மீறி சென்னை மாநகராட்சி மருத்துவமனைகளில் நர்சிங் கல்வி தகுதி இல்லாதவர்களை பணி அமர்த்தினால் மக்களுக்கான சிகிச்சையில் குறைபாடு ஏற்பட்டு அபாயகரமான விளைவுகள் உண்டாகும்.தமிழக அரசு மருத்துவமனைகளில் எம்.ஆர்.பி., மூலம் தேர்வு செய்யப்பட்டு தொகுப்பூதியத்தில் பல்லாயிரம் செவிலியர்கள் பணிபுரிகின்றனர். தேர்தல் வாக்குறுதியில் அனைத்து தொகுப்பூதிய செவிலியர்களும் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என தெரிவித்து விட்டு அதை மீறும் அரசு செயல்படக்கூடாது.எனவே இது போன்ற காலிப்பணியிடங்களில் 9 ஆண்டுகளாக அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் செவிலியர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ