விருதுநகர் -- சாத்துார் ரோட்டில் மண் மேவியதால் விபத்து அபாயம்
விருதுநகர், : விருதுநகர் -- சாத்துார் ரோட்டில் அதிக அளவில் மண்மேவி இருப்பதால் டூவீலர், சைக்கிளில் செல்பவர்கள் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.விருதுநகர் எம்.ஜி.ஆர்., சிலை சந்திப்பில் இருந்து சாத்துார் செல்லும் ரோட்டில் தினமும் லாரி, வேன், ஆட்டோ, கார், டூவீலர் என அதிக வாகனங்கள் சென்று வருகிறது.விருதுநகரில் இருந்து கலெக்டர் அலுவலக வளாகம், அதனை சுற்றிய பகுதிகளுக்கு செல்லும் முக்கிய ரோடாக உள்ளது. இதனால் காலை முதல் இரவு வரை போக்குவரத்து நிறைந்த பகுதியாக உள்ளது.ஆனால் இந்த ரோட்டின் இருபுறமும் மண்மேவி நிறைந்து உள்ளது. டூவீலர், சைக்கிள்களில் செல்பவர்கள் தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். வாகனங்கள் மோதி பலரும் காயமடைந்து வருகின்றனர். இதுவரை மண்மேவிய பகுதிகளை சுத்தம் செய்யாமல் உள்ளனர். இதனால் விபத்துக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இவ்வழியாக பெண்கள், வயதானவர்கள் வாகனங்களை ஓட்டிச் செல்வதற்கே அஞ்சுகின்றனர். எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாத்துார் செல்லும் ரோட்டில் மண்மேவிய இடங்களை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.