உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / எரிக்கப்படும் குப்பை பாதிக்கும் அபாயம்

எரிக்கப்படும் குப்பை பாதிக்கும் அபாயம்

ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சியில் பல்வேறு தெருக்களில் எரிக்கப்படும் குப்பையால் அப்பகுதி குடியிருப்போர் சுவாச கோளாறுக்கு ஆளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.நகராட்சியில் 33 வார்டுகள் உள்ள நிலையில் ஒவ்வொரு தெருவிலும் காலியாக உள்ள இடத்தில் குப்பைகளை கொட்டி, பல நேரங்களில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் தீ வைத்து விடுகின்றனர்.இதில் குப்பைகள் தீப்பிடித்து எரிந்தாலும் அதிலிருந்து வெளியேறும் நச்சுப் புகை அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்படுத்தும் நிலையை உருவாக்குவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.எனவே குடியிருப்பு பகுதியில் குப்பைகளை தீ வைத்து எரிப்பதை நகராட்சி தூய்மை பணியாளர்கள் கைவிட்டு, வேறு இடங்களுக்கு குப்பைகளை கொண்டு செல்ல வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை