போலீசாருக்கு அறை வழங்கல்
விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவமனை, மகப்பேறு பிரிவு வளாகத்தில் தினமலர்செய்தி எதிரொலியாக போலீசுக்கு தனி அறையை வழங்கப்பட்டது. விருதுநகர் அரசு மருத்துவமனை, மகப்பேறு பிரிவிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு பணியாற்றுவதற்காக விருதுநகர் சப்-டிவிஷனில் உள்ள அனைத்து ஸ்டேஷன்களில் இருந்தும் போலீசார் சுழற்சி முறையில் பணிபுரிந்து வருகின்றனர்.ஆனால் இவர்களுக்கு அறைகள் வழங்கப்படாததால் மழை, வெயில், பனியில் தொடர்ந்து பணியாற்றுகின்றனர். கழிவறை வசதிகள் கூட இல்லாததால் சிரமத்துடன் பணியாற்றுகின்றனர் என தினமலர் நாளிதழில் பிப். 14ல் செய்தி வெளியானது.இதையடுத்து தினமலர் செய்தி எதிரொலியாக பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு உடனடியாக மருத்துவமனை, மகப்பேறு பிரிவு வளாகங்களில் தனி அறைகள் வழங்கப்பட்டது. மேலும் கழிவறை வசதிகளும் ஏற்படுத்தி மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.