உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ரூ.2000 லஞ்சம் மின்வாரிய உதவி பொறியாளர் கைது

ரூ.2000 லஞ்சம் மின்வாரிய உதவி பொறியாளர் கைது

நரிக்குடி: விருதுநகர் மாவட்டத்தில் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி பொறியாளர் ராமமூர்த்தியை 46, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். நரிக்குடி பாப்பாகுளத்தை சேர்ந்த பிச்சைராமு, கூல்டிரிங்ஸ் கம்பெனி நடத்தி வருகிறார். இவரது கம்பெனிக்கு உயரழுத்த மின் இணைப்பு வழங்க கோரி உதவி பொறியாளர் ராமமூர்த்தியிடம் கேட்டார். அதற்கு ரூ. 2 ஆயிரம் லஞ்சம் தர வேண்டுமென ராமமூர்த்தி கேட்டார். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. நேற்றிரவு நரிக்குடி பஸ் ஸ்டாண்டில் வைத்து ராமமூர்த்தி பணத்தை பெற்றபோது, லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !