மேலும் செய்திகள்
முதியவரிடம் ரூ.55 ஆயிரம் அபேஸ்
07-Oct-2025
ஸ்ரீவில்லிபுத்தூர்: வத்திராயிருப்பு கே.புதுரை சேர்ந்தவர் அருண்குமார் 40. இவர் நேற்று முன்தினம் ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் ஸ்டாண்ட் அருகே டி.பி.எஸ். வங்கி ஏ.டி.எம்.மில் அவரது மனைவியின் ஸ்டேட் பேங்க் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி பணம் எடுக்க சென்றார். அப்போது அங்கு நின்ற 25 வயது நபர் தனது ஏ.டி.எம். கார்டு ரிவர்ஸ் ஆகிறது எனக் கூறியுள்ளார். இந்நிலையில் அருண்குமார் தான் கொண்டு சென்ற கார்டை பயன்படுத்தி பேலன்ஸ் ஸ்டேட்மென்ட் எடுத்து பார்த்து கொண்டிருக்கும்போது, அங்கிருந்தவர் வெளியேறி சென்றுள்ளார். பின்னர் அருண்குமார் அருகிலுள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஏ.டி.எம்.மில் சென்று பேலன்ஸ் பார்த்தபோது தனது ஏ.டி.எம் கார்டு மாறி உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக ஸ்டேட் பேங்க் சென்று கணக்கை லாக் செய்யும்போது, மனைவியின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.40 ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளது தெரிந்தது. இதனால் டி.பி.எஸ்., வங்கி ஏ.டி.எம்.ல் நின்ற நபர் தான், தனது ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி பணம் திருடி இருக்கலாம் என ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசில் அருண்குமார் புகார் செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
07-Oct-2025