உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அரசு மருத்துவமனையில் உப்புச்சர்க்கரைக் கரைசல்

அரசு மருத்துவமனையில் உப்புச்சர்க்கரைக் கரைசல்

விருதுநகர் விருதுநகர் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் பயன்பெறும் வகையில் ஓ.ஆர்.எஸ்., எனும் உப்புச்சர்க்கரைக் கரைசல் கேன்களில் வைக்கப்பட்டுள்ளது.மாவட்டத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது. வெப்பச் சலனத்தால் பகலில் டூவீலரில் செல்வோர் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர்.கோடை காலங்களில் அதீத வெப்பம் காரணமாக உடலில் நீர்ச்சத்து குறைவதால் மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் குறைந்து மயக்கம், 'ஹீட் ஸ்ட்ரோக்' உள்ளிட்டவை ஏற்படுகின்றன. இதனால் உள்ளுறுப்புகள் பாதிக்கப்பட்டு மரணத்திற்கும் வழிவகுக்கிறது.குழந்தைகள், முதியவர்கள் இப்பிரச்னையால் அதிகம் பாதிப்படைகின்றனர். எனவே உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.உப்புச்சர்க்கரைக் கரைசல் அடிக்கடி பருகுவதால் உடலில் நீர்ச்சத்தை உடனடியாக மீட்டெடுக்க உதவுகிறது. இதனடிப்படையில் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையின் பொது மருத்துவப் பிரிவு, அறுவை சிகிச்சைப் பிரிவு பகுதிகளில் 6 இடங்களில் நோயாளிகளும், உடன் வருபவர்களும் பயன்பெறும் வகையில் உப்புச்சர்க்கரைக் கரைசல் கேன்களில் வைக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி