மேலும் செய்திகள்
பூங்குணம் ஊராட்சியில் தண்ணீர் தட்டுப்பாடு
26-Jan-2025
சாத்துார்; சாத்துார் அருகே பெத்து ரெட்டிபட்டியில்குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.பெத்து ரெட்டிபட்டி ஊராட்சியில் பெத்து ரெட்டிபட்டி, சின்னத்தம்பிபுரம், வடமலாபுரம், ஆகிய கிராமங்கள் உள்ளன. பெத்து ரெட்டிபட்டியில் மூன்று மேல்நிலை குடிநீர் தொட்டியின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. உள்ளூர் குடிநீர் ஆதாரத்தை பயன்படுத்தி ஊராட்சியில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில் கடந்த ஒரு மாதமாக மோட்டார் பழுது காரணமாக ஊராட்சியில் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.இதனால் மக்கள் வேறு வழி இன்றி வண்டிகளில் விற்பனை செய்யப்படும் மினரல் வாட்டரை விலைக்கு வாங்கி குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர். உப்புத் தண்ணீரை பிடித்து மக்கள் பாத்திரம் துலக்கவும் குளிக்கவும் பயன்படுத்தி வருகின்றனர். மோட்டார் பழுதை விரைவில் சரி செய்து சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
26-Jan-2025