சாத்துார் - இருக்கன்குடி ரயில்வே கேட் மூடல்..
சாத்துார்: சாத்துாரில் இருந்து இருக்கன்குடி செல்லும் ரோட்டில் உள்ள ரயில்வே கேட் ஆக.,25 ல் காலை 8:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை அவசர கால தண்டவாள பராமரிப்பு பணிக்காக மூடப்படுகிறது. போக்குவரத்திற்கு மக்கள் மாற்றுப்பாதையை பயன்படுத்திக் கொள்ளுமாறு விருதுநகர் ரயில்வே துறை சீனியர் பொறியாளர் செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.