உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / திறந்த வெளி பாராக மாறி வரும் சாத்துார் பூங்காக்கள்

திறந்த வெளி பாராக மாறி வரும் சாத்துார் பூங்காக்கள்

சாத்துார் சாத்துார் பூங்காக்களை திறந்த வெளி பாராக பயன்படுத்தி வருவாதில் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். சாத்துார் ஹவுசிங் போர்டு காலனி, தில்லைநகர், குருலிங்கபுரம் சென்ட்ரல் எக்சைஸ் தெரு பகுதியிலும் நகருக்கு சற்று தொலைவில் பூங்காக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த பூங்காக்களுக்கு காலை , மாலை நேரத்தில் மட்டும் மக்கள் சென்று நடை பயிற்சி , உடற்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இரவு நேரத்தில் இந்த பூங்காக்களை குடிமகன்கள் திறந்தவெளி பார் ஆக பயன்படுத்தி வருகின்றனர்.மது குடித்துவிட்டு பாட்டில்களையும் டம்ளர்களையும் பாதையில் வீசி செல்வதால் காலை நேரத்தில் இங்கு நடைபயிற்சி , உடற்பயிற்சி செய்ய வரும் மக்கள் காலில் கண்ணாடி துண்டுகள் குத்தி காயம் ஏற்படுவதால் பாதிக்கப்படுகின்றனர்.மேலும் இந்த பூங்காக்களில் பொருத்தப்பட்டிருந்த தெரு விளக்குகளை குடிமகன்கள் சேதப்படுத்தி விட்டதால் இரவு நேரத்தில் பூங்காக்கள் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. நகராட்சி நிர்வாகம் உடைந்து போன ெதரு விளக்குகளை சீரமைப்பதோடு இந்த பகுதியில் சிசிடிவி காமிரா பொருத்தி கண்கானிக்க வேண்டுமென மக்கள் வலியுறுத்தியுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ