மேலும் செய்திகள்
முதல்வர் கோப்பை போட்டி முடிவுகள்
15-Sep-2024
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மாவட்ட அளவிலான பளு தூக்கும் போட்டியில் சாதனை படைத்தனர்.மதுரையில் முதலமைச்சர் கோப்பைக்கான பளு தூக்கும் போட்டியில் விருதுநகர், சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவிகள் பல்வேறு பிரிவுகளில் கலந்து கொண்டனர்.45 கிலோ பிரிவில் சோனியா 3ம் இடம், 55 கிலோ பிரிவில் பவித்ரா லட்சுமி 2ம் இடம், ஹார்னிகா 3ம் இடம், 59 கிலோ பிரிவில் பிரியதர்ஷினி 2 ம் இடம், பிரித்கா 3ம் இடம், 64 கிலோ பிரிவில் காவியதர்ஷினி 3ம் இடம், 71 கிலோ பிரிவில் ஹரிணி முதல் இடம், ரஸ்மி 3ம் இடம், 71 கிலோ பிளஸ் எடை பிரிவில் யோகேஸ்வரி முதல் இடம், நித்யா 2 ம் இடம், அட்சயா 3ம் இடம் பெற்றனர்.சாதனை படைத்த மாணவிகளை அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை தலைவர் சுதாகர், எஸ்.பி.கே., ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயலர் காசி முருகன், பள்ளித் தலைவர் மதிவாணன், பள்ளிச் செயலர் ராம்குமார், நிர்வாக குழுவினர், தலைமை ஆசிரியை தங்கரதி, ஆசிரியர்கள் பாராட்டினர்.--
15-Sep-2024