உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை

தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை

விருதுநகர்: கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தில் பயன்பெற விரும்புவோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.மகளிர் உரிமைத் தொகை, சமூகநலப் பாதுகாப்பு உதவித்தொகை போன்ற அரசின் வேறு திட்டங்களில் உதவித்தொகை, ஓய்வூதியம் பெறும் பயனாளிகள் விண்ணப்பிக்க இயலாது. 58 வயது முடிந்திருக்க வேண்டும். தமிழ்ப்பணி ஆற்றிய விவரக்குறிப்பு, பரிந்துரைச் சான்று இரண்டு தமிழறிஞர்களிடம் இருந்து பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.ஆதார் கார்டு நகல், ரேஷன் கார்டு நகல் இணைக்க வேண்டும்.விண்ணப்பத்தை தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் அலுவலகத்திலேயே பெற்றுக் கொள்ளலாம். www.tamilvalarchithurai.tn.gov.inகட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அக். 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ