உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பள்ளி, கல்லுாரி செய்திகள்

பள்ளி, கல்லுாரி செய்திகள்

ராஜபாளையம்: ராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லுாரியில் சேன்லேக்ஸ் இன்டர்நேஷனல் ஜேர்னல் ஆப் ஆர்ட்ஸ் மற்றும் வணிகவியல் துறை சார்பாக தேசிய அளவு கருத்தரங்கம் நடந்தது. விருதுநகர் செந்தில்குமார் நாடார் கல்லுாரி பேராசிரியர் செல்வநாதன், திருநெல்வேலி சதக்துல்லா கல்லுாரி பேராசிரியர் முஸ்தபா, ஹைதராபாத் ரிசர்ச் அசோசியேட் முருகன் பங்கேற்று வர்த்தகத்தில் உலகளாவிய போக்குகள், சவால்கள், வாய்ப்புகள் குறித்து பேசினர். கல்லுாரி நிர்வாகி ரமணி தலைமை வகித்தார். துணை முதல்வர் மஞ்சுளா தேவி வரவேற்றார். 19 கல்லுாரிகளில் இருந்து 250 மாணவர்கள் கலந்து கொண்டனர். உதவி பேராசிரியர் கலாமணி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ