உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பள்ளி கல்லுாரி செய்திகள்

பள்ளி கல்லுாரி செய்திகள்

மருத்துவ முகாம் விருதுநகர்: விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் விசாகா செல், என்.எஸ்.எஸ்., சார்பில் அக்குபஞ்சர் மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது. இதில் ஜே.சி., அக்குபஞ்சர் ஹீலர் சந்தியா, குழுவினர் மாணவிகள், ஆசிரியர்களுக்கு பரிசோதனை செய்தனர். மேலும் டயானப்பிரியா ஆரோக்கியமான வாழ்வியல் குறித்து பேசினார். ஏற்பாடுகளை புஷ்பவேணி, என்.எஸ்.எஸ்., அதிகாரி மஞ்சு செய்தனர். பயிற்சி பட்டறை சிவகாசி: எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரியில் முதுநிலை, இயற்பியல் ஆராய்ச்சி துறை சார்பில் சுற்றுகள் முதல் கிளவுட் வரை எதிர்காலத்திற்கான வன்பொருள் மற்றும் மென்பொருள் இரண்டையும் உள்ளடக்கிய ஒரு திறந்த மூலத் தயாரிப்பு இணைய பொருள்கள், செயற்கை நுண்ணறிவு திறன்கள் பற்றிய பயிற்சி பட்டறை நடந்தது. மாணவி பாத்திமா கஜிரா வரவேற்றார். கல்லூரி முதல் சுதா பெரியதாய் தலைமை வகித்தார். ராஜபாளையம் பேகன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் நிறுவனர் செந்தில் முருகன் பேசினார். குழு தலைவராக அமுதா ஒருங்கிணைப்பாளர்களாக செல்வி லட்சுமி, நித்யா செயல்பட்டனர். மாணவி சியாமளா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் .ஏற்பாடுகளை இயற்பியல் துறை பேராசிரியர்கள் செய்தனர்.----- மாணவர்கள் சங்க துவக்க விழா சிவகாசி: பி.எஸ்.ஆர்., பொறியியல் கல்லுாரியில் இயந்திரவியல் துறை மாணவர்கள் சங்க துவக்க விழா, தொழில் முனைவோருக்கான கருத்தரங்கம் நடந்தது. கல்லுாரி தாளாளர் சோலைசாமி தலைமை வகித்தார். இயக்குனர் விக்னேஸ்வரி முன்னிலை வகித்தார் முதல்வர் செந்தில்குமார், டீன் மாரிசாமி வாழ்த்தினர். துறை தலைவர் பிச்சிப்பூ வரவேற்றார். மதுரை சரண்யா, சதீஷ் சங்கத்தை துவக்கி வைத்தனர். சங்க தலைவர் கமலக்கண்ணன், செயலாளர் ஸ்ரீநாத் தேவேஸ்வரன், செயல் உறுப்பினர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். முத்தையா நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லுாரி இயந்திரவியல் துறை பேராசிரியர்கள் குமாரசாமி கார்த்திக் செய்தனர்.----- பாரதியார் நினைவு நாள் விழா சிவகாசி: அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி முதுகலை தமிழ் துறை சார்பில் பாரதியார் நினைவு நாள் விழா நடந்தது. பாரதி மனைவி செல்லம்மாள் பிறந்த ஊரான கடையம், பாரதி சிறிது காலம் வாழ்ந்த இடம் உள்ளிட்ட இடங்களை களவழி ஆய்வின் வழி பார்த்து மாணவர்கள் கேட்டு அறிந்தனர். முதுகலை தமிழ் துறை முதலாம் ஆண்டு இரண்டாம் ஆண்டு முனைவர் பட்ட ஆய்வாளர் பங்கு பெற்றனர். முதுகலை தமிழ் துறை இணை பேராசிரியர்கள் முத்தமிழ்செல்வன், சாந்தி வழிகாட்டியாக செயல்பட்டனர். கல்லுாரி முதல்வர் அசோக்,முதுகலை தமிழ் துறை தலைவர் அருள்மொழி பாராட்டினர். ------ விழிப்புணர்வு கூட்டம் சிவகாசி: காளீஸ்வரி கல்லுாரியில் மாணவர்கள் ஆலோசனை குழு, உள் புகார்கள் குழு சார்பில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பு, ஆரம்ப கால கண்டறிதல் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. உதவி பேராசிரியர் ராஜலட்சுமி வரவேற்றார். முதல்வர் பாலமுருகன் தலைமை வகித்தார். துணை முதல்வர் முத்துலட்சுமி, சிவகாசி நர்மதா மருத்துவமனை டாக்டர் நர்மதா பேசினார். உதவி பேராசிரியர் ஐஸ்வர்யா நன்றி கூறினார். ஆசிரியர்கள், 900 மாணவர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் கலந்து கொண்டனர்.------- தாத்தா பாட்டி தின விழா சிவகாசி: கிருஷ்ணசாமி சர்வதேச பள்ளியில் தாத்தா பாட்டிகள் தினம் கொண்டாடப்பட்டது. பள்ளி நிறுவன ராஜு, பாப்பா தலைமை வகித்தனர். மாரனேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆயுஸ் டாக்டர் ஹரிணிக்கு உலக சாதனை புரிந்தமைக்கான பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மழலைப்பள்ளி மாணவர்கள் தங்கள் தாத்தா பாட்டிகளை வரவேற்று கவிதை பாடி, ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுடன் மகிழ்வித்தனர். ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் முத்துக்குமார், முதல்வர் தனலட்சுமி, மழலை பள்ளி ஆசிரியர்கள் செய்தனர். விளையாட்டு விழா சத்திரப்பட்டி: சத்திரப்பட்டி ஆறுமுகம் பழனி குரு பெண்கள் கலை அறிவியல் கல்லுாரியில் 6ம் ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. கல்லூரி சேர்மன் ஆறுமுகம் தலைமை வகித்தார். தாளாளர் பழனி குரு முன்னிலை வகித்தார். முதல்வர் நாகலட்சுமி வரவேற்றார். உடற்கல்வி ஆசிரியை ரமணி விளையாட்டு அறிக்கை வாசித்தார். செஸ், கேரம், நீளம் தாண்டுதல், இறகு பந்து, கபடி உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் சபயர் அணிக்கு வழங்கப் பட்டது. மாணவி நிஷா நன்றி கூறினார். விழாவில் பள்ளி ஆலோசகர் சித்ராதேவி, சி.பி.எஸ்.இ., பள்ளி முதல்வர் சத்தியமூர்த்தி, கல்லுாரி ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர். உலக சுற்றுலா தினம் ராஜபாளையம்: ராஜபாளையம் ராஜூக்கள் கல்லுாரியில் யுவா சுற்றுலா சங்கம் சார்பாக உலக சுற்றுலா தினம் கொண்டாடப் பட்டது. முதல்வர் ராமகிருஷ்ணன் தலைமை அமைத்து பேசினார். மாஜெட் குழும நிறுவனர் ராம் சிங் சுற்றுலா துறையின் வளர்ந்து வரும் நோக்கம், தொழில் வாய்ப்புகள் குறித்து விளக்கினார். ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஜெகநாத் ஏற்பாடுகளை செய்தார். உதவி ஒருங்கிணைப்பாளர் ஹரி பிரசாத் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !