உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  தையல் பயிற்சி வகுப்பு

 தையல் பயிற்சி வகுப்பு

விருதுநகர்: விருதுநகரில் பைவ் ஸ்டார் பிசினஸ் பைனான்ஸ் லிமிடெட், மைன்ஸ் டிரஸ்ட் சார்பில் தையல் பயிற்சி வகுப்பை துவங்கியது. விருதுநகர் சூலக்கரை அருகே தாதம்பட்டி ரோட்டில் 240 பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி வகுப்பை சமூக பொறுப்பு நிதி தலைமை அதிகாரி சிவராம் கிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலு வலர் லியாகத் அலி, நிறுவனர் அந்தோணி ஜெரால்டு துவங்கி வைத்தனர். தையல் பயிற்சி பள்ளியில் பயிற்சிகள் 3 மாத காலத்திற்கு இலவசமாக கற்றுத் தரப்படுவதுடன், ரூ.ஆயிரத்திற்கு தையல் கருவிகள் தொகுப்பு இலவசமாக வழங்கப்படுவதோடு, 3 மாத பயிற்சி முடிப்போருக்கு தொழில் துவங்க இலவச தையல் இயந்திரம் வழங்கப்படும் என தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை