இருக்கன்குடியில் கடைகள் அடைப்பு
சாத்துார்: சாத்துார் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோயில் மேட்டில் 2வது நாளாககடைகள் அடைத்து வியாபாரிகள் போராட்டம் செய்தனர்.இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் வரி வசூல் செய்வது தொடர்பாகநத்தத்துப்பட்டி ஊராட்சிக்கும், இருக்கன்குடி ஊராட்சிக்கும் இடையே சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.இந்தநிலையில் நீதிமன்றத்தின் உத்தரவுபடி கலெக்டர் இருக்கன்குடி கோயிலில் ஆய்வு செய்தார். அவரது ஆய்வில் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் கட்டப்படும் கட்டடங்களுக்கான வரைபட அனுமதி, வரி வசூல் போன்ற நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள ஆவணங்களின் அடிப்படையில் நத்தத்துபட்டி ஊராட்சி அதிகாரம் பெற்றுள்ளதாக கலெக்டர் உத்தரவிட்டார். இந்த உத்தரவு ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்டது.இதனைக் கண்டித்து கோயில் மேட்டில் கடைகள் நடத்தி வரும் இருக்கன்குடி கிராமத்தைச் சேர்ந்த வியாபாரிகள் நேற்று 2வது நாளாக கடைகளை அடைத்து கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கோயில் மேட்டில் கடைவீதி வெறிச்சோடி காணப்பட்டது. பக்தர்கள் வழக்கம்போல் சாமி தரிசனம் செய்து சென்றனர்.