சிவகாசி சிறுகுளம் கண்மாய்கரை நடைபாதை புதர், செடிகள் அகற்றம்
சிவகாசி: mதினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக சிவகாசி சிறுகுளம் கண்மாய் கரையில் புதிதாக அமைக்கப்பட்ட நடைபாதையில் ஆக்கிரமித்து இருந்த புதர்கள், செடிகள் அகற்றப்பட்டது.சிவகாசி சிறுகுளம் கண்மாயில் குப்பை கொட்டுவதாலும் கழிவு நீர் கலப்பதாலும் துர்நாற்றம் ஏற்படுத்தியதோடுசுகாதாரகேடும் ஏற்பட்டது. மேலும் கண்மாய் கரை முழுவதுமே திறந்த வெளி கழிப்பறையாக மாறியதால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் பெரிதும் சிரமப்பட்டனர். எனவே கண்மாயில் குப்பை கொட்டுவதையும் கழிவு நீர் கலப்பதை தடுப்பதற்காகவும் கரையில் இரண்டு மீட்டர் அகலம், 841 மீட்டர் நீளத்திற்கு புதிய நடைபாதை அமைக்கவும், தெருவிளக்குகள், இருக்கைகள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி பூங்கா அமைக்கவும் ரூ. 1.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 2022 செப்.ல் பூமி பூஜை போடப்பட்டது. ஆனால் பணிகள் தொடர்ந்து நடைபெறாமல், பல்வேறு கோரிக்கைகளுக்குப் பிறகு ஒரு ஆண்டுக்குப் பின்னர் கரையில் நடைபாதை அமைக்கும் பணி துவங்கியது. இருக்கைகள், தெருவிளக்கு வசதி, பாதுகாப்புவேலி ஏற்படுத்தப்பட்டது. ஆனால் கண்மாய் கரையை சீரமைக்காமல் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் நடைபாதை முழுவதுமே முட்புதர்கள்செடிகள் ஆக்கிரமித்துஉள்ளதால், இவ்வளவு வசதிகள் ஏற்படுத்தியும் மக்கள் பயன்படுத்த முடியவில்லை. பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகளில் நடமாட்டமும் உள்ளது. எனவே கரையை சீரமைத்து நடைபாதையில் உள்ள செடிகளை அகற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக நடைபாதையில் ஆக்கிரமித்து இருந்த புதர்கள் செடிகள் உடனடியாக அகற்றப்பட்டது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.