உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சிறுதானிய மதிப்பு கூட்டுதல் பயிற்சி

சிறுதானிய மதிப்பு கூட்டுதல் பயிற்சி

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை வேளாண் அறிவியல் நிலையத்தில் ஊட்டச்சத்து பாதுகாப்பு, சிறுதானிய மதிப்பு கூட்டுதல் பயிற்சி நடந்தது. ஹைதராபாத் தேசிய வேளாண் ஆராய்ச்சி, மேலாண்மை நிறுவனம், அருப்புக்கோட்டை வேளாண்மை அறிவியல் நிலையம் இணைந்து நடத்திய பயிற்சியில் தேசிய வேளாண் ஆராய்ச்சி முதன்மை விஞ்ஞானி பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்விரமேஷ் வரவேற்றார். விவசாயிகளுக்கு ஊட்டச்சத்து மேலாண்மை முக்கியத்துவம், வீட்டுத்தோட்டம் அமைக்கும் முறை, தரமான விதைகள் ரகங்கள் தேர்வு, மதிப்பு கூட்டு பொருட்கள் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் விளக்கப்பட்டன. பேராசிரியர் நல்ல குறும்பன் பேசினார். விவசாயிகளுக்கு வீட்டுத் தோட்டம் அமைப்பதற்கான இடுபொருட்கள், குதிரைவாலி தானியம் வழங்கப்பட்டது. உதவி பேராசிரியர் வேணு தேவன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை