உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நான்கு வழிச்சாலையில் சோலார் விளக்கு பொருத்தம்

நான்கு வழிச்சாலையில் சோலார் விளக்கு பொருத்தம்

விருதுநகர்: விருதுநகர் நான்கு வழிச்சாலையில் விருதுநகர் நுழையும் பகுதியில் நான்கு சோலார் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் நான்கு வழிச்சாலையில் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு நான்கு சோலார் விளக்குகள் புதிதாக பொருத்தப்பட்டுள்ளன. இதனால் இப்பகுதியின் வெளிச்சம் அதிகரித்துள்ளது.இப்பகுதியில் வெளிச்சம் குறைவாக இருந்த நிலையில் தற்போது இந்த சோலார் விளக்குகள் வரப்பிரசாதமாக உள்ளது.இதே போல் சோலார் விளக்குகள் சத்திரரெட்டியபட்டி விலக்கு, நல்லமநாயக்கன்பட்டி, புல்லலக்கோட்டை ரோடு சந்திப்பு போன்ற இடங்களில் சோலார் விளக்குகள் அமைக்க உள்ளதாக நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை