உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தென்மேற்கு பருவ மழை முன் எச்சரிக்கை நடவடிக்கை

தென்மேற்கு பருவ மழை முன் எச்சரிக்கை நடவடிக்கை

திருச்சுழி:திருச்சுழி பகுதிகளில் தென்மேற்கு பருவ மழையை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தீயணைப்பு துறையினர் செயல் விளக்கம் அளித்தனர்.தென் மேற்கு பருவ மழையை நீர்நிலைகளில் சிக்கி தத்தளித்துக் கொண்டிருப்பவர்களையும், வெள்ளத்தில் அடித்துச் செல்பவர்களை மீட்பது குறிததும், மீட்கப்பட்ட நபருக்கு செயற்கை சுவாசம் கொடுத்து எவ்வாறு உயிர் பிழைக்க வைப்பது பற்றிய செயல்முறை விளக்கத்தை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை நடத்தியது.திருச்சுழி கண்மாய் தமிழ்பாடி அருகில் தீயணைப்பு நிலைய அலுவலர் சந்திரசேகரன், சிறப்பு நிலை அலுவலர் முனீஸ்வரன், ஏட்டு கண்ணன் மற்றும் வீரர்கள் பொது மக்களுக்கு செயல் விளக்கம் செய்து காண்பித்தனர். வெள்ளம் குறித்தான முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் மக்களுக்கு விளக்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை