மேலும் செய்திகள்
பள்ளி கல்லுாரி செய்திகள்
14-Sep-2025
ராஜபாளையம் : ராஜபாளையம் ஸ்ரீ ரமண வித்யாலயா, ஸ்ரீ ரமண அகாடமி சி.பி.எஸ்.இ பள்ளிகளில் சிறப்பு குழந்தைகளின் கவனிப்பு பற்றி ஆசிரியர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி ஆலோசகர் டாக்டர் கு.கணேசன் தலைமை வகித்தார். ஆசிரியை முத்துமாரி வரவேற்றார். உளவியலாளர் வேணி பள்ளி சேர்க்கைக்கு வரும் குழந்தைகளிடமிருந்து சிறப்பு குழந்தைகளை சிறுவயதிலேயே கண்டறிவது எப்படி, அவர்களை பேணுவது, மேற்கொள்ள வேண்டிய சிறப்பு நடவடிக்கைகள், பெற்றோருக்கான ஆலோசனைகள் வழங்கி ஆசிரியர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தார். ஆசிரியை இளவேனில் நன்றி கூறினார். ஏற்பாடுகளை முதல்வர்கள் சுதா, கல்யாணி தலைமையில் ஒருங்கிணைப்பாளர் தனலட்சுமி, நிர்வாக அலுவலர் ராமராஜ், முனீஸ்வரன் செய்தனர்.
14-Sep-2025