உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மாவட்டத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகை

மாவட்டத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகை

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் ஒரு மாதம் முழுவதும் நோன்பிருந்த முஸ்லிம்கள் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு புத்தாடை அணிந்து பள்ளி வாசல்களில் தொழுகையில் ஈடுபட்டனர்.விருதுநகர் பெரிய பள்ளி வாசலில் தலைவர் செய்யது இப்ராஹிம் முன்னிலையில் முஹம்மது இஸ்மாயில் தலைமையில் நேற்று காலை 6:40 மணிக்கு சிறப்பு தொழுகை நடந்தது. கல் பள்ளி வாசலில் தலைவர் ராஜா முஹம்மது முன்னிலையில் ஷா நவாஸ்கான் தலைமையிலும், சின்னப் பள்ளிவாசலில் தலைவர் நுாருல் அமீன் முன்னிலையில் முஹம்மது மைதீன் தலைமையிலும், ரோஜா நகர் பள்ளிவாசலில் தலைவர் சம்சுதீன் முன்னிலையில் அப்துல் கரீம் பாக்கவி தலைமையிலும், மதீனா பள்ளி வாசலில் தலைவர் சிக்கந்தர் பாட்ஷா முன்னிலையிலும், அப்துல் ரஹ்மான் தலைமையிலும், கூரைக்குண்டு பள்ளி வாசலில் தலைவர் ஹபீப் முஹம்மது முன்னிலையிலும், காசிம் தலைமையிலும் சிறப்பு தொழுகைகள் நடந்தது.மேலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நகராட்சி முஸ்லிம் நடுநிலைப்பள்ளியில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் புத்தாடைகள் அணிந்து ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். பலர் ஏழைகளுக்கு உணவளித்தனர்.* ராஜபாளையத்தில் சீதக்காதி திடலில் இருந்து முடங்கியார் ரோடு வழியே ஈத்கா மைதானம் வரை ஊர்வலம் நடந்தது. இஸ்லாம் கொடியை ஏந்தியவாறு இறைவன் புகழ் வாசகங்களை முழக்கமிட்டபடி ஊர்வலம் சென்றனர்.சம்பந்தபுரம் மேல பள்ளிவாசல், கீழப்பள்ளிவாசல், ஆயிஷா பள்ளிவாசல், பெரிய கடை பஜார் உள்ளிட்ட பள்ளிவாசல்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து பங்கேற்று சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகைக்கு பின் ஒருவருக்கு ஒருவர் ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.* ஸ்ரீவில்லிபுத்துார் ஜும்மா புது பள்ளி வாசலில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நேற்று அதிகாலை 4:00 மணிக்கு சிறப்பு தொழுகை நடந்தது. ஏராளமானோர் தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர் ஒருவருக்கொருவர் பண்டிகை வாழ்த்துக்கள் தெரிவித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். அசோக் நகர் ஜாமியத்தில் அல் மதினா பள்ளி வாசலிலும், கூமாபட்டி, தம்பிபட்டி பள்ளி வாசல்களிலும் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை நடந்தது.* சிவகாசி மாநகர த.மு.மு.க.,வின் இஸ்லாமிய பிரசார பேரவை சார்பாக ரம்ஜானை முன்னிட்டு மீரா உசேன் தெருவில் சிறப்பு தொழுகை நடந்தது. அப்துல் காதர் உஸ்மானி சிறப்பு தொழுகையை நடத்தி வைத்தார். த.மு.மு.க., மாநில செயலாளர் முஸ்தபா குத்பா பேசினார். மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் முஹம்மது இஸ்மாயில், உட்பட பலர் கலந்து கொண்டனர்.இதே போல் சிவகாசி ஷாபாஸ்கான் கோரி பள்ளிவாசல், பெரிய பள்ளிவாசல், ரிசர்வ் லைன் பள்ளிவாசல், திருத்தங்கல் பள்ளிவாசல் மதினா பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடந்தது. * நரிக்குடி வீரசோழன், காரேந்தல் பெரிய பள்ளிவாசலில் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு சிறப்பு தொழுகைகள் நடந்தன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் சிறப்பு தொழுகைகளில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ