மேலும் செய்திகள்
விளையாட்டு போட்டிகள்
19-Dec-2024
விருதுநகர் : விருதுநகர் மாவட்ட இந்திய அரசு இளைஞர் நலன், விளையாட்டு அமைச்சகம், நேரு யுவகேந்திரா, விருதுநகர் மேரே யுவா பாரத் இணைந்து ஒன்றிய போட்டிகளில் வென்ற அணிகளுக்கான மாவட்ட விளையாட்டு போட்டி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்தது.இதில் ஓட்டப்பந்தயம், சிலம்பம், வாலிபால், கயிறு இழுத்தல் உள்பட பல போட்டிகளை இளைஞர் நல அலுவலர் ஞானச்சந்திரன் துவங்கி வைத்தார். இதில் வென்ற வீரர்களுக்கு பரிசுகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் குமரன் மணிமாறன், சமூக சுகாதார அலுவலர் ராஜ்குமார் வழங்கினர். உடற்கல்வி ஆசிரியர் பிச்சை நன்றி கூறினார். ஏற்பாடுகளை தேசிய சேவை தொண்டர்கள் செய்தனர்.
19-Dec-2024