பள்ளியில் விளையாட்டு விழா
காரியாபட்டி : காரியாபட்டி செயின்ட் மேரீஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 39வது ஆண்டு விழா நடந்தது. மதுரை பசுமலை மேல்நிலைப்பள்ளி விளையாட்டு இயக்குனர் (ஓய்வு) டேனியல் கொடி அசைத்து துவக்கி வைத்தார். கராத்தே, சிலம்பம், யோகா, மனித கோபுரம், மாணவர்களின் அணிவகுப்பு, நிகழ்ச்சிகள் நடந்தன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தாளாளர் கீதா பரிசு வழங்கினார். முதல்வர் இமாகுலேட், துணை முதல்வர் கயல்விழி உட்பட பலர் கலந்து கொண்டனர்.