மேலும் செய்திகள்
பரமக்குடி பாலியல் வழக்கு அறையை மூடி விசாரணை
28-Nov-2024
ஸ்ரீவில்லிபுத்தூர் : தங்கை கொலை வழக்கு விசாரணை நடக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்திற்கு ஆட்டோவில் அரிவாளுடன் வந்தவரை போலீசார் கைது செய்தனர்.காரியாபட்டி தாலுகா கல்குளத்தை சேர்ந்த நாகலட்சுமி 25, இவர் சில மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தேனி மாவட்டம் ராயவேலூரை சேர்ந்த ராஜபாண்டி 27, என்பவரை காரியாபட்டி போலீசார் கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடக்கிறது.் நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இருந்த நிலையில், நாகலட்சுமியின் சகோதரர் கருப்பசாமி 35, ஒரு ஆட்டோவில் அரிவாளுடன் நீதிமன்றம் நோக்கி வந்துள்ளார். இதனை வாகன தணிக்கை பணியில் இருந்த எஸ்.ஐ.பாலமுருகன் கண்டறிந்து, கருப்பசாமியை கைது செய்து ஆட்டோ, அரிவாளை பறிமுதல் செய்தனர்.
28-Nov-2024